வடகொரியாவுக்கு தகுதி உள்ளதா? இப்படியே போனால் என்ன நடக்கும்

Report Print Abhimanyu in ஏனைய நாடுகள்

வடகொரியாவுக்கு ஐக்கிய நாட்டுப் பொதுச் சபையில் உறுப்பினராக இருப்பதற்கு தகுதி உள்ளதா? என பரிசீலனை செய்யுமாறு தென்கொரியா வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய நாட்டு பொதுச் சபைக் கூட்டத்தில், தென் கொரிய வெளியுறவு அமைச்சர் “யூன் பியூங் செ” வடகொரியா அண்மையில் மேற்கொண்ட தொடர் ஏவுகணைகள், அணுச் சோதனைகள் போன்றவற்றை சுட்டிகாட்டி ஐக்கிய நாட்டுப் பொதுச் சபையில் வடகொரியாவை உறுப்பினராக வைப்பதற்கு மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் உலக அளவில் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளையும் மீறி இம்மாத தொடக்கத்தில் வடகொரியா அதன் ஐந்தாவது அணுசக்திச் சோதனையை நடத்தியுள்ளது.

ஆனால் அணுச்சோதனைகளைக் கண்டிக்கும் வகையில் ஏற்கனவே வடகொரியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன அவற்றில் உள்ள குறைபாடுகளையும் நிவர்த்திசெய்து விரிவான, வலுவான தடைகளை விதிக்க வேண்டுமென்று யூன் வலியுறுத்தினார்.

வடகொரியா தொடர்ந்தும் பாதுகாப்பு மன்றத்தின் முடிவுகளை ஏற்காமல் செயற்பட்டுவருவதை கருத்திற்கொண்டு ஆழமாகச் சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதாகவும் வடகொரியாவின் அணுவாயுத நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர இதுவே கடைசி வாய்ப்பு என்றும் “யூன் பியூங் செ” இதன்போது கூறினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments