கறுப்பு உடைகளுக்கு திடீர் தட்டுப்பாடு: விற்பனையாளர்களுக்கு அரசு விடுத்த கடும் எச்சரிக்கை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

தாய்லாந்து அரசர் காலமானதை அடுத்து 30 நாட்கள் அங்குள்ள மக்கள் துக்கம் அனுசரிக்க முடிவு செய்துள்ளனர். இதனால் கறுப்பு உடைகளுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தாய்லாந்தில் நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் சமீபத்தில் காலமானார். மன்னரின் பிரிவிவை தாங்க முடியாத பொதுமக்கள் அழுது புலம்பி மன்னர் பேரில் தாங்கள் கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மன்னரின் மறைவையொட்டி 30 நாட்கள் துக்கம் அனுசரிக்க அங்குள்ள அரசு முடிவு செய்துள்ளது. இதனால் பொதுமக்கள் கறுப்பு உடை அணிந்து நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.

இதனிடையே தாய்லாந்து முழுவதும் திடீரென்று கறுப்பு உடைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் பல விற்பனையாளர்களும் திக்குமுக்காடி வருகின்றனர்.

ஆனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கறுப்பு உடைகளுக்கு சிலர் அதிக கட்டணத்தை வசூலிப்பதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து கறுப்பு உடைகளை பதுக்குவதும் அதிக கட்டணத்திற்கு விற்பனை செய்வதும் குற்றச்செயலாகும் என்று அரசு அறிவித்துள்ளது.

மட்டுமின்றி அதிக கட்டணத்தை வசூலிக்கும் விற்பனையாளருக்கு 3,000 பவுண்ட்ஸ் அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், விற்பனையாளர்கள் போதிய அளவுக்கு கறுப்பு உடைகளை வரவழைத்து தரும் வரை பொதுமக்கள் எவரும் குறிப்பிட்ட உடைகளை வாங்குவதை நிறுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சுற்றுலாவுக்கு பெயர்போன தாய்லந்தின் முக்கிய பகுதிகள் அனைத்தையும் இந்த 30 நாட்களும் மூட உத்தரவு இடப்பட்டுள்ளது. மட்டுமின்றி பாங்காக்கில் உள்ள பாலியல் விடுதிகளும் இந்த 30 நாட்களும் இயங்காது எனவும் அறிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments