பெற்றோருக்கு ஒரே பிள்ளையா? அவர்களுக்கு இவ்வளவு பிரச்சினைகளா?

Report Print Maru Maru in ஏனைய நாடுகள்

உலகில் பெற்றோருக்கு ஒரே பிள்ளையாக வளர்பவர்கள் எண்ணிக்கை, 320 மில்லியன். அதாவது உலகின் குழந்தைகளில் 14 சதவீதம். இது நியூயார்க்கில் எடுக்கப்பட்ட ஒரு சர்வே.

இந்த கணக்கெடுப்பு குழந்தைகளின் 0-17 வயது வரையிலானது மட்டுமே. இவர்கள் ஒரே பிள்ளையாக இருப்பதோடு, ஒரே தாய், ஒரே தந்தை என்றுதான் குடும்பத்தில் வாழ்கிறார்கள்.

அதனால், அவர்களுக்கு பெரும்பாலும் உதவுகிறவர்கள் வட்டம் குறைவுதான். பொருளாதார கஷ்டங்கள், சமூகத்தில் அவர்களுக்கு ஏற்படும் களங்கங்கள், தனிப்பட்ட கஷ்டங்கள், எதிர்ப்புகள் இவை யாவையும் தனிநபர்களாக நின்று எதிர்கொள்ள வேண்டிய ஒரு சவாலாகவே அமைகிறது.

பெற்றோருக்கும் ஒரே பிள்ளையை வளர்ப்பதில் பெரிய சிரமங்கள் ஏற்படுகின்றன. அத்தகைய குடும்பங்களில் வேலையின்மை, சுகாதர பாதுகாப்பின்மை ஏற்படுகின்றன.

அதிலும் வெளிநாடு போன்ற தொலைதூர பயணம் சென்றவர்கள் குடும்பத்தில் நோய், அதனால், இறப்பு, மகப்பேறு இறப்பு, விபத்துக்களில் பெற்றோர் மரணம் என அதிகமாகவே நடக்கின்றன.

அதுமட்டுமல்ல, மூன்றில் ஒரு குழந்தை பெற்றோரை சிறுவயதிலே இழந்துவிடுகிறது. ஆனால் கடந்த நூற்றாண்டில் அதிர்ஷ்டவசமாக இந்த அளவு குறிப்பிடும்படியாக குறைந்துள்ளது.

உலக அளவில் ஒரு பிள்ளையாக வளர்பவர்கள் வீட்டில்தான் விவாகரத்து, திருமணத்துக்குப் பிறகு பெற்றோரை விட்டு பிள்ளைகள் பிரிந்து செல்லுதல். அங்கு, தனிக்குடித்தனம் சென்றவர்களுக்கும் பாதுகாப்பு இருக்காது. தனியே விடப்பட்ட பெற்றோருக்கும் பாதுகாப்பு இருக்காது.

ஒரு பிள்ளையாக இருப்பவர் பிள்ளைகளை வளர்க்க நாதி இருக்காது. அதனால், கணவன் மனைவிக்குள் கோப தாபங்கள் பிரச்சினைகள் உருவாகுவது சாத்தியம்.

மேலும், மேற்கத்திய கலாச்சாரங்களில் திருமணம் ஆகாமலே சிலர் கர்ப்பம் ஆவதும், பலர் திருமணமாகதவர்களாகவும் எந்த துணையுமில்லாதவர்களாகவும் சமூகத்தில் விடப்படுகின்றனர்.

சமூக காரணிகள் அவர்களை கடுமையாக பாதிக்கிறது அதுபோல, ஒற்றை பிள்ளையாக வளர்பவர்களின் பிரச்சினைகளும் இந்த சமூகத்தை பாதிக்கவே செய்கிறது.

இத்தகைய குடும்பங்களின் எண்ணிக்கை நாடுகளுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. 10 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள் வாழ்வது வளர்ச்சி அடைந்த 3 டஸன் நாடுகளில்தான். அவை, சீனா, இந்தியா, இந்தோனேஷியா, இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி உள்ளிட்ட நாடுகள்தான்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments