உலகிலேயே முதன் முதலாக கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களை புதைக்க தனி கல்லறை திறப்பு

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்

உலகிலேயே முதன் முதலாக கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களை புதைக்க தனி கல்லறை ஒன்று சுவீடன் நாட்டில் திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக நாடுகளில் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில் சீனாவிற்கு அடுத்ததாக சுவீடன் நாடு உள்ளது.

இந்நாட்டில் சுமார் 76 சதவிகித மக்கள் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கிறித்துவ மதத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்தால், அவர்களின் சடலங்களை புதைக்கும் இடத்தில் சிலுவை சின்னம் வைப்பது வழக்கம்.

ஆனால், கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களின் சடலங்கள் புதைக்கும் இடத்திலும் சிலுவை சின்னம் வைப்பது உயிரிழந்தவரின் நம்பிக்கைக்கு எதிரானது என Josef Erdem என்ற ஆசிரியர் கோரிக்கை விடுத்தார்.

மத்திய சுவீடனில் உள்ள Borlänge என்ற நகரை சேர்ந்த இந்த ஆசிரியர் உள்ளூர் கிறித்துவ தேவாலயத்தை சேர்ந்த அதிகாரிகளிடம் இக்கோரிக்கை கொடுத்ததை தொடர்ந்து அது தற்போது ஏற்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த தேவாலயத்திற்கு அருகிலேயே ஒரு தனி இடம் ஒதுக்கப்பட்டு அதில் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களை புதைக்கவும், அவர்கள் விரும்பும் சின்னத்தை சடலம் புதைக்கும் இடத்தில் வைத்துக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாத Gunnar Lindgren என்ற ஆசிரியர் பேசியபோது, ‘இந்த அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. ஏனெனில், எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை. ஆனால், நான் இறந்த பிறகு எனது சடலம் புதைக்கும் இடத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிக்கும் சின்னத்தை வைப்பதை நான் விரும்பவில்லை’ என பதிலளித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments