இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்!

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஈராக்கில் இராணுவ வீரர்கள், போராளிகள் சுத்தியலால் குழந்தைகளை அடித்து கொடுமைப்படுத்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோசூல் நகரில் ஐ.எஸ் அமைப்பிற்கு எதிராக துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவரும் அந்நாட்டு இராணுவத்தினரே இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர்.

மோசூல் நகர போர் சுழலில் பொது மக்கள் இராணுவத்தினரால் துன்புறுத்தப்படுவதை பொது மன்னிப்பு சபை எச்சரித்ததை தொடர்ந்தே குறித்த சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

எட்டு வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த சிறுவன் ஐ.எஸ் இயக்கத்திற்கு விசுவாசமாக இருந்தாரா என இராணுவத்தினர் விசாரித்ததாக கூறப்படுகிறது.

குறித்த வீடியோவில், இராணுவ வீரர்கள் குழுவிக்கு முன் சிறுவன் ஒருவன் சுத்தியல் முழங்காலில் அடிக்கப்பட்டு பின்னர், கான்கிரீட் பலகையால் தலையில் தாக்கப்படுகிறார்.

ட்விட்டரில் வெளியான மற்றொரு வீடியோவில், லொறியுடன் கைவிலங்கிடப்பட்டுள்ள சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் கொடூரமாக தாக்கப்படுகின்றன்.

சிறுவன் ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க குழுவினர் அவனை தொடர்ந்து தாக்குகின்றனர். இதை ஒருவர் தனது போனில் படம் பிடித்து வெளியிட்டுள்ளார்.

மற்றொரு வீடியோவில், மோசூலில் இருந்த தப்பித்த Ihab Muhammad என்ற சிறுவனை, ஈராக் இராணுவத்தினர் நீ ஐ.எஸ் இயக்கத்தை சேர்ந்தவனா என கேள்வி கேட்டு தாக்குகின்றனர்.

ஈராக் இராணுவத்தினர் இதுபோன்ற பல மிருகத்தனமான தாக்குதல்கள் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments