திருமணத்திற்கு பிறகு கள்ளத் தொடர்பு: எந்த நாடு முன்னணியில் உள்ளது தெரியுமா?

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்

சர்வதேச அளவில் திருமணத்திற்கு பிறகு கணவன் மற்றும் மனைவிக்கு தெரியாமல் மற்றவர்களுடன் கள்ள தொடர்பில் ஈடுப்பட்டு வரும் நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

பிரித்தானிய நாட்டை சேர்ந்த Durex ஆணுறை தயாரிப்பு நிறுவனம் ‘உலகளவில் தன்னுடைய துணைக்கு தெரியாமல் அல்லது துணைக்கு துரோகம் செய்துவிட்டு மற்றவரிடம் கள்ள தொடர்பு வைத்துக்கொள்வதில் எந்த நாடு முன்னணியில் உள்ளது’ என ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

இந்த ஆய்வில் ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்நாட்டில் 51 சதவிகித தம்பதிகள் திருமணத்திற்கு பிறகு தங்களுடைய துணைகளுக்கு துரோகம் செய்துவிட்டு கள்ள தொடர்பு வைத்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதுமட்டுமல்லாமல், சர்வதேச அளவில் பாலியல் தொழில் அதிகளவில் நடைபெற்று வருவதும் தாய்லாந்து நாட்டில் தான்.

திருமணத்திற்கு பிறகு கள்ள தொடர்பில் ஈடுப்படுபவர்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியல் இதோ!

  1. தாய்லாந்து - 51 சதவிகிதம்
  2. டென்மார்க் - 46
  3. இத்தாலி - 45
  4. ஜேர்மனி - 45
  5. பிரான்ஸ் - 43
  6. நோர்வே - 41
  7. பெல்ஜியம் - 40
  8. ஸ்பெயின் - 39
  9. பிரித்தானியா - 36
  10. பின்லாந்து - 36

இப்பட்டியலில் வட மற்றும் தென் அமெரிக்காவை சேர்ந்த எந்த நாடும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments