பெர்முடா முக்கோணத்தில் புதைந்திருக்கும் மர்மங்கள்- வெட்ட வெளிச்சமான உண்மைகள்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

பெர்முடா முக்கோணம் அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது.

மியாமி, பியூர்டோ ரீகோ, பெர்முடா போன்றவைகள் இந்த பெர்முடா முக்கோணத்தால் சூழப்பட்டுள்ளன.

இந்நிலையில் பெர்முடா முக்கோணப் பகுதியில் விமானங்கள், கப்பல்கள் மாயமாவதற்கு அங்குள்ள மோசமான காலநிலை தான் காரணம் என ஸ்டீவன் மில்லர் என்ற ஆராய்ச்சியாளர் தெரிவித்தார்.

சரி, பெர்முடா முக்கோணத்தின் சில தெரியாத ரகசியங்களை பற்றி பார்ப்போம்.

இந்த பெர்முடா முக்கோணமானது 500,000 லிருந்து 1,510,000 அடியில் பெரியதாக அமைந்துள்ளது.

இதற்குள் சென்று காணாமல் போன கப்பல்களோ, விமானங்களோ திரும்ப கிடைப்பதில்லை.

இந்த பெர்முடா முக்கோணத்தை பற்றி முதன் முதலில் ஆராய்ச்சி செய்து எழுதியவர் கிரிஸ்டோபர் என்னும் எழுத்தாளர் தான்.

ஒரு கப்பல் உலகில் எங்கு போய் கொண்டிருந்தாலும் அதன் சரியான திசையை திசைகாட்டி காட்டும் அல்லவா?

ஆனால் இந்த பெர்முடா முக்கோணத்தில் மட்டும் அது தவறான திசையே காட்டும். இதனால் தான் இங்கு பல விபத்துக்குக்கள் நடந்து கப்பல்கள் காணாமல் போகின்றன.

இந்த முக்கோணத்தில் கடைசி நூற்றாண்டு வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளார்கள், மற்றும் வருடத்துக்கு 20 கப்பல்களும், 4 விமானங்கள் இங்கு காணாமல் போகின்றது.

புரூஸ் ஜெர்னான் என்னும் விமானி மட்டும் தான் இந்த பெர்முடா முக்கோணத்துக்கு சென்று விட்டு பல ஆபத்துகளை சந்தித்து விட்டு அதிலிருந்து திரும்ப வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments