தானியங்கி வாகனச் சேவையில் களமிறங்கும் நாடு!

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஓட்டுநர் இல்லாத தானியங்கி வாகன சேவையில் அதிரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளது சீனா. முதற்கட்ட சோதனை ஓட்டத்தில் 200 பேர் பங்கேற்பு.

சீனாவின் கூகுள் என்று அறியப்படும் Baidu அந்த நாட்டில் தானியங்கி வாகனச் சேவை மேற்கொள்ளும் திட்டத்தில் இறங்கியுள்ளது.

அதன்பகுதியாக 200 வாகனங்களின் சோதனை ஓட்டத்தையும் குறித்த நிறுவனம் நடத்தி முடித்துள்ளது.

சீனாவின் வூஷன் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பொதுமக்கள் 200 பேர் இந்த சோதனை ஓட்டத்தில் பயணிகளாக பங்கேற்றுள்ளனர்.

தொடர்ந்து 2 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ள குறித்த நிறுவனம், மிக விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

குறித்த தானியங்கி வாகன சேவையை முதன் முதலில் ஊபேர் நிறுவனம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தும் நோக்கில் சோதனை ஓட்டம் மேற்கொண்டது.

அதன் பின்னர் தற்போது சீனாவின் Baidu களமிறங்கியுள்ளது. இதேபோன்று கூகுள் நிறுவனத்தின் தானியங்கி கார்களும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments