நடுக்கடலில் மூழ்கிய படகு: அகதிகளின் திக் திக் நிமிடங்கள்- வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

சிரியா, ஆப்பிரிக்கா நாடுகளை சேர்ந்த அகதிகள் படகு இத்தாலி சென்று கொண்டிருந்த போது கவிழ்ந்து விபத்துக்குள்ளான வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏறப்படுத்தியுள்ளது.

பல பேர் கடலில் முழுகுவது போல ஒரு வீடியோ தற்போது இணையத்தில் உலா வருகிறது.

அதில், ஒரு வெள்ளை நிறத்திலான படகு Mediterranean கடலில் மிக அதிக பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது.

அப்போது அதிக எடை தாளாமல் அந்த படகு தள்ளாட அதில் இருந்த அகதிகள் பலர் தண்ணீரில் விழுகின்றனர். அந்த படகு பக்கத்திலேயே ஒரு பெரிய கப்பல் நின்றிருப்பது போல அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

வீடியோவில் உள்ளதோ ஒரு படகு தான் ஆனால் பல படகுகள் அந்த மூழ்கிய படகுடன் பின்னால் வந்துள்ளது என கடலோர படை மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

இது குறித்து அந்த குழுவின் உயர் அதிகாரி கூறுகையில், அந்த கடலில் 11 பெரிய படகுகள் 1400 க்கும் மேற்பட்ட அதிக பயணிகளை ஏற்றி கொண்டு வந்துள்ளது.

அதிக பயணிகளின் பாரம் தாங்காமல் ஒரு படகு தண்ணீரில் கவிழ்ந்துள்ளது. நேற்று இரவு மட்டும் அதிலிருந்து நாங்கள் 400 பேரை மீட்டுள்ளோம், பலர் காணாமல் போயுள்ளார்கள்.

தண்ணீரில் மூழ்கி பலர் உயிரிழந்தும் உள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்த வருடத்தில் மட்டும் பாலஸ்தீனம், லெபனான், சிரியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளை சேர்ந்த 4655 அகதிகள் கடல் வழியாக படகிலோ, கப்பலிலோ போகும் போது உயிரிழந்தும், காணாமல் போயும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments