தரையில் விழுந்து நொறுங்கிய ஏலியன்ஸின் பறக்கும் தட்டு: கமெராவில் சிக்கிய காட்சி

Report Print Basu in ஏனைய நாடுகள்

சீனாவில் மர்மபொருள் ஒன்று வானத்திலிருந்து விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்து சாம்பலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Zhangjiapan என்ற கிராமத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.

சம்பவத்தை நேரில் கண்ட Zhang என்ற நபர் கூறுகையில், பயங்கர சத்தத்துடன் ஒரு மர்ம பொருள் ஒன்று வானத்திலிருந்து கீழே விழுந்து தரையை உடைத்துக்கொண்டு சென்றது. அது தரையில் மோதும் போது பயங்கர சத்தம் ஏற்பட்டது.

பின்னர், அந்த மர்ம பொருள் தீப்பற்றி எரிய தொடங்கியது என தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் அப்பகுதியிலிருந்து எழுத்துக்கள் மற்றும் எண்களால் எழுதப்பட்டிருந்த ஒரு பெரிய மோதிரம் வடிவிலான இரும்பு பொருளை கைப்பற்றியுள்ளனர்.

மேலும், அப்பகுதியை சுற்றியுள்ள உள்ள இடங்களிலிருந்து சில இரும்பு துண்டுகளை கண்டெடுத்துள்ளனர்.

பலர், இது ஏலியன்ஸின் வேலை என கருத்து தெரிவித்து வருகின்றனர். அது ஏலியன்ஸின் பறக்கும் தட்டிலிருந்து விழுந்து ஒரு பாகம் எனவும் கூறி வருகின்றனர்.

எனினும், இதை கைப்பற்றியுள்ள பொலிசார் அதை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments