விமான விபத்தில் உயிர் பிழைத்தது எப்படி? திக் திக் நிமிடத்தை விளக்கிய கால்பந்து வீரர்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கடந்த நவம்பர் மாதம் 28ஆம் திகதி பிரேசில் நாட்டு கால்பந்து வீரர்கள் பயணம் செய்த விமானம் கொலம்பியாவில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 76 பேர் பலியானர்கள்.

அதில் ஆறு பேர் மட்டுமே உயிர் பிழைத்தார்கள். அதில் ஒருவரான பிரேசில் உள்ளூர் அணியான Chapecoenseன் வீரர் Alan Ruschel (27) மருத்துவமனை சிகிச்சை முடிந்து தானே வீல்சேரிலிருந்து எழுந்து நடந்து காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

தற்போது அந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

அதற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தான் உயிர் பிழைத்ததை பற்றி கூறுகையில், நான் விபத்து நடக்கும் சில நிமிடங்களுக்கு முன்னர் வரை விமானத்தில் கடைசி சீட்டில் உட்கார்ந்திருந்தேன்.

அப்போது என்னிடம் வந்த கால்பந்து சங்க தலைவர் Cadu Gaucho ,நீங்கள் முன் சீட்டில் சென்று அமருங்கள். பின்னர் பத்திரிக்கையாளர்கள் சிலர் அமர உள்ளார்கள் என கூறினார்.

நானும் முன் சீட்டில் வந்து அமர்ந்தேன். பின்னர் சில நிமிடங்களில் நடந்த விபத்தில் நான் முதலில் அமர்ந்திருந்த பின் சீட்டில் இருந்தவர்கள் எல்லோரும் உயிரிழந்து விட்டார்கள்.

நான் முன் சீட்டுக்கு வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன் என கண்ணீருடன் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments