உலக புகழ்பெற்ற இந்த போட்டோவை பார்த்ததுண்டா? அப்படி என்ன ஆச்சரியம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

பிரேசில் நாட்டை சேர்ந்த Nelson Felippe என்னும் நபர் ஒரு புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றியுள்ளார். இது வைரலாக உலகெங்கிலும் பரவி வருகிறது.

அப்படி என்ன ஆச்சரியம் அதில் என கேட்கிறீர்களா? கீழ் உள்ள புகைப்படத்தில் டக்கென எதை பார்க்க தோன்றுகிறது? இரண்டு பெண்களையோ அல்லது ஆண் நடந்து வருவதையோ தானே?

ஆனால் அதில் யாரும் கவனிக்காத ஒரு விடயத்தை பற்றி Nelson சிறிய எச்சரிக்கை கதையாகவே கூறியுள்ளார்.

ஆம் இந்த புகைப்படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள ஒரு நபரை பற்றி தான் முக்கிய செய்தியாக சமூகத்துக்கு இப்படி கூறுகிறார்.

தனி மனித சுதந்திரம் என்பது ஒருபுறம் இருக்கட்டும்! ஆனால் அவர்கள் சார்ந்தவரையோ அல்லது சமூதாயத்தோ அது பாதிக்கக்கூடாது என, ரயில் நிலையத்தின் ரயில் வரும் பிளாட்பார்மின் மிக அருகில் ஆபத்தான நிலையில் நிற்கும் ஒரு இளைஞனை பற்றி அவர் கூறுகிறார்.

மேலும் இப்படி யாரும் செய்யாதீர்கள், சில அடி பின்னோக்கி நின்றால் ஆபத்து வராது என அவர் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments