விமான விபத்தில் தீவிரவாதிகளுக்கு தொடர்பா? ரஷ்யா விளக்கம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ரஷ்ய ராணுவ விமான விபத்துக்கு தீவிரவாதிகள் காரணமாக இருப்பார்கள் என நினைக்கவில்லை என ரஷ்யா கூறியுள்ளது.

91 பேருடன் சென்ற டியு-154 ராணுவ விமானம் நேற்று கருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

அந்த பகுதிக்கு சென்ற ரஷ்ய பாதுகாப்பு படையினர், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவரும் வேளையில், இதுவரை நான்கு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் மக்சிம் சொகொலோவ் கூறுகையில், இந்த விபத்துக்கு காரணம் விமானியின் கவனக்குறைவோ அல்லது தொழில்நுட்ப கோளாறோ என நாங்கள் கருதுகின்றோம்.

தீவிரவாதிகள் மீது இதுவரை எங்களுக்கு சந்தேகம் வரவில்லை என கூறிய அவர், இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் சரியான காரணம் தெரியவரும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments