சவுதி பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து போட்ட குத்தாட்டம்.. நிலைமை என்ன ஆகும்? வைரலாகும் வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சவுதி அரேபியாவில் இளம் பெண்கள் மதுபானம் குடித்து, இளைஞர்களுடன் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சவுதி அரேபியாவில் மிக்ஸ்டு பார்ட்டி என்ற பெயரில் இளம் பெண்கள் மதுபானம் குடித்து இளைஞர்களுடன் ஆட்டம் போட்டுள்ளனர், அது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் அரேபிய பெண்கள், வெளிநாட்டு பெண்களுடன் மதுபானம் குடித்துக் கொண்டு ஆட்டம் போட்டுள்ளனர், அதுமட்டுமின்றி அங்கிருந்த இளைஞர்களுடனும் கட்டுப்பாட்டை மீறி நடந்துள்ளனர்.

அப்போது வீடியோவிற்கு பின்புறம் அரேபிய பாடல் இசைத்துள்ளது, அதன் பின்னர் பொலிசார் அந்த பார்ட்டியில் இருந்த பலரை கைது செய்துள்ளதாக தெரிகிறது.

சவுதி அரேபியாவில் கடுமையான சட்டத்திட்டங்கள் இருந்து வரும் நிலையில், பெண்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதே போன்று கடந்த மாதம் மிக்ஸ்டு பார்ட்டி என்ற பெயரில் வெளிநாட்டவர்கள் சிலர் மதுபானங்கள் குடித்து ஆட்டம் போட்டதாகவும், பொலிசார் அவர்களை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments