12 வயதில் 90 வயது தோற்றமுடைய சிறுமி: உயிரிழந்த பரிதாபம்!

Report Print Santhan in ஏனைய நாடுகள்

கொலாம்பியாவைச் சேர்ந்த 90 வயது தோற்றமுடைய 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் உலக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Karen Ordonez கொலாம்பியாவைச் சேர்ந்த இவர் வினோதமான (progeria) நோய் தாக்கத்தினால் மிகவும் முதிர்ச்சியாக தென்பட்டார். இந்த வகையான நோய் உலகில் எட்டு மில்லியன் மக்களில் ஒருவருக்கு வரும் மிகவும் அரிதான நோய் என்று கூறப்படுகிறது.

இந்த நோய் வந்தவர்கள் மிகவு வயதானவர்கள் போல் காட்சி அளிப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதன் படியே Karen Ordonez தன்னுடைய 12 வயதில் 90 வயது முதியவர் போல் காட்சி அளித்தார்.

இவருக்கு இந்த நோய் இவருடைய ஆரம்ப வயதில் ஏற்பட்டதாகவும், அதன் பின் அது படிப்படியாக அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது.

இவருக்கு அடுத்த படியாக இந்த நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர் கொலாம்பியாவைச் சேர்ந்த Magali Gonzalez இவர் அண்மையில் தன்னுடைய 15வது பிறந்தநாளை கொண்டாடினார்.

மேலும், Karen Ordonezக்கு இந்த நோய் தாக்கம் மட்டுமின்றி கீழ்வாதம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் கூட இருந்துள்ளது. இவற்றை எல்லாம் மீறி வாழ்க்கையில் போராடி வாழ்ந்து வந்த Karen Ordonez உடல் நலப் பிரச்சனை காரணமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments