உலகிலேயே பாலியல் குற்றங்கள் அதிகம் நடைபெறும் நாடு எது? இலங்கை எத்தனையாவது இடம்?

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

உலகில் நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அக்கறை காட்டும் அரசு, பாலியல் தொடர்பான வன்முறை சம்பவங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதும், ஆண்களின் மாறுபட்ட மனப்போக்கும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதற்கு காரணமாக இருக்கின்றன.

பலாத்கார சம்பவங்களின் அடிப்படையில், உலகில் அதிகமாக பலாத்கார சம்பவங்கள் நடக்கும் நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அமெரிக்கா

வல்லசு நாடான அமெரிக்காவில் 91 சதவீத பெண்களும், 9 சதவீதன ஆண்களும் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர் என U.S Bureau புள்ளியல் தகவலை வெளியிட்டுள்ளது. 6 பெண்களில் ஒருவர் மற்றும், 33 ஆண்களில் ஒருவர் என வாழ்நாள் முழுவதும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். இதில் அதிகமாக கல்லூரி மாணவிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

அமெரிக்காவில் பொது இடங்களில் பாலியல் சம்பவங்கள் நடைபெற்றாலும், வீடுகளிலும் அதிகமாக பாலியல் வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன.

தென் ஆப்பிரிக்கா

அதிகமாக பலாத்கார குற்றங்கள் நடைபெறும் நாடுகளில் தென் ஆப்பிரிக்காவும் ஒன்று. கடந்த 2012 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 65,000 பாலியல் குற்ற சம்பவங்கள் நடந்துள்ளன என புகார்கள் பதிவாகியுள்ளன. உலகிலேயே இளம் வயது குழந்தைகள் அதிகமாக பலாத்காரத்திற்கு உள்ளாகும் நாடு தென் ஆப்பிரிக்கா நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்நாட்டில் பலாத்கார குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படுவதால் இக்குற்றங்கள் அதிகம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

ஸ்வீடன்

ஐரோப்பிய நாடுகளில் பாலியல் குற்றங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ஸ்வீடன் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 2009 ஆம் ஆண்டில் தான் அதிக வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. அதாவது 7,590 புகார்கள் பதிவாகியுள்ளது. 58 சதவீதமாக குற்ற எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தியா

பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்கள் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதில், 24,470 பெண்கள், தங்களது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என புள்ளியல் விபரங்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியா

இங்கிலாந்து நாட்டிற்கு வருடந்தோறும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். எந்த அளவுக்கு சுற்றுலா பயணிகளை இந்த நாடு கவர்ந்திழுக்கிறதோ, அதே போன்று பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெறுகின்றன.

குறிப்பாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் தான் அதிக குற்றங்கள் நடைபெறுகின்றன. இந்த இரண்டு பகுதிகளில் மட்டும் ஒரு வருடத்திற்கு சுமார் 85,000 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர், ஒட்டுமொத்த பிரித்தானியாவில் மட்டும் வருடத்திற்கு 400,000 பெண்கள் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர். சராசரியாக 16 வயது பெண்கூட தான் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டேன் என்று சமூகத்தின் முன்னிலையில் வெட்ட வெளிச்சமாக தெரிவிக்கும் நிலையில் உள்ளது.

ஜேர்மனி

ஜேர்மனியில் 240,000 பெண்கள் பாலியல் குற்றங்களால் இறந்துபோயுள்ளனர். இந்நாடு தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிக்கொண்டிருந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் பின்தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ்

1900 ஆம் ஆண்டு காலம் வரை பிரான்சில் பலாத்காரம் செய்வது என்பது ஒரு குற்றம் கிடையாது. ஆனால் அந்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்த காரணத்தால் 1980 ஆம் ஆண்டுக்கு பிறகு பாலியல் குற்றத்திற்கு எதிரான சட்டம் கொண்டுவரப்பட்டது. பிரான்சில் 75,000 பாலியல் குற்றங்கள் நடந்தாலும், 10 சதவீதம் புகார்களே பதிவு செய்யப்பட்டுள்ளன.

கனடா

கனடாவில் 2,516,918 பாலியல் குற்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக பதிவாகியுள்ளது. 3 இல் 1 பெண்கள் பலாத்காரத்திற்கு ஆளாவதாக புள்ளியல் விபரங்கள் தெரிவிக்கின்றன. 62 சதவீத பெண்கள் உடல்ரீதியாகவும், 9 சதவீத பெண்கள் தாக்கப்பட்டு உருக்குலைந்து போயுள்ளனர் எனவும் விபரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை

இலங்கையில் போர் முடிந்து 7 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஐநா ஆய்வின்படி, 1.6 சதவீதம் பேர் கும்பலாக சேர்ந்து பாலியல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். 96.5 சதவீதம் பேர் தொடர்ச்சியாகவே பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 64.9 சதவீதம் பேர் ஒன்றுக்கும் அதிகமான முறையில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். 11.1 சதவீதம் பேர் 4 பெண்கள் அல்லது அதற்கும் அதிகமான பெண்களை பலாத்காரம் செய்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

எத்தியோப்பியா

பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறை சம்பவங்கள் எத்தியோப்பாவில் வருடத்திற்கு 60 சதவீதம் நடைபெறுகிறது. இந்நாட்டில் அதிகமான பெண்கள் கடத்தல் முறையில் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments