கணவன் முன்னால் மனைவியை கற்பழித்த கொடூரன்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்
660Shares
660Shares
lankasrimarket.com

மலாவி நாட்டில் கணவன் முன்னால் மனைவியை கற்பழித்த காமக் கொடூரன் ஒருவனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவியில் உள்ள Nkhulambe என்ற நகரில் தான் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் பெயர் வெளியிடப்படாத தம்பதி இருவர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 8-ம் திகதி இரவு உணவு முடித்துக்கொண்டு இருவரும் படுக்கைக்கு சென்றுள்ளனர்.

கணவன் அருகில் படுத்திருக்க மனைவி உடல் அசதி காரணமாக உடனடியாக ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது, நள்ளிரவு நேரத்தில் தன்னை உறவுக்கொள்வதை மனைவி தூக்கத்தில் உணர்ந்துள்ளார். இது தன்னுடைய கணவர் தான் என எண்ணிய அவர் அதற்கு அனுமதித்துள்ளார்.

ஆனால், சில நிமிடங்களுக்கு பிறகு நபரின் வாயில் இருந்து மது வாடை வந்ததை தொடர்ந்து அது தன்னுடைய கணவர் இல்லை என உணர்ந்த மனைவி அதிர்ச்சியில் அலறியுள்ளார்.

அப்போது, அருகில் படுத்திருந்த கணவர் எழுந்து விளக்கை போட்டதும் அறையில் இருந்த அந்த மர்ம நபர் அங்கிருந்து வேகமாக தப்பி ஓடியுள்ளார்.

மேலும், அங்கிருந்து தப்புவதற்காக தன்னுடைய உள்ளாடைகளை அவர் அங்கியே விட்டுவிட்டு தப்பியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் தம்பதி புகார் அளித்துள்ளனர்.

பின்னர், இருவரின் வீட்டில் சோதனை செய்தபோது மர்ம நபர் விட்டுச்சென்ற ஆடைகளை பயன்படுத்தி உடனடியாக பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

பொலிசார் நடத்திய விசாரணையில் அவர் கற்பழித்தது உண்மை என நிரூபனம் ஆனது. எனினும், மர்ம நபர் எப்படி வீட்டிற்குள் நுழைந்தார் என்பது உள்ளிட்ட தகவல்களை பொலிசார் வெளியிடவில்லை.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, பெண்ணை கற்பழித்த நபருக்கு நீதிபதிகள் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments