நீங்கியது பெர்முடா முக்கோண மர்மமுடிச்சு.. விமானங்கள், கப்பல்கள் உள்ளிழுப்பதேன்: வெளியான ஆச்சரிய தகவல்!

Report Print Santhan in ஏனைய நாடுகள்
455Shares
455Shares
lankasrimarket.com

அட்லாண்டிக் பெருங்கடலில் மிகப் பெரிய பகுதியாக கருதப்படுகிறது பெர்முடா முக்கோணம். இது 50,00,000 சதுர மீற்றர் பரப்பளவு கொண்டது.

இந்த பெர்முடா முக்கோணம் உலகின் பல புதிர்களுக்கு தெரியாத விடைகளாகவே இருந்து வந்துள்ளது.

இதன் வழியே செல்லும் நூற்றுக்கணக்கான விமானங்கள் மற்றும் கப்பல்கள் திடீரென்று தலைமறைவாகிவிடும். இது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பெர்முடா முக்கோணத்தை சாத்தானின் முக்கோணம் என்று கூறுவார்கள்.

பெர்முடா முக்கோணம் இருந்த இடத்தில் மிகப் பெரிய நகரம் ஒன்று இருந்ததாகவும், அது கடுமையான குளிர் மற்றும் பனியினால் முழ்கடிக்கப்பட்டுவிட்டதாகவும், அது தான் இந்த பெர்முடா முக்கோணத்திற்கு அடியில் இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

அந்த நகரம் சுமார் 11, 700 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்துள்ளது என கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2001 ஆம் ஆண்டு கடல்சார் பொறியாளரான Pauline Zalitzki மற்றும் அவரது கணவரான Paul Weinzweig பெர்முடா முக்கோணத்தின் மர்மத்தை அவிழ்ப்பதற்காக, அதன் எல்லையின் கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 700 மீற்றர் ஆழத்திற்கு சென்று வீடியோ எடுக்கும் அளவிற்கு ரோபோ ஒன்றை பயன்படுத்தினர்.

அப்போது அங்கு சில கிரானைட் பிரமிடுகள் மற்றும் கட்டமைப்புகள் போன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவைகள் தானே இருக்கிறது, அதனால் ஏன் இதன் வழியாக செல்லும் விமானங்கள் மற்றும் கப்பல்கள் உள் இழுக்கப்படுகின்றன என்ற சந்தேகம் ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் அது கடும் பனியால் முழ்கியுள்ளது. அதைத் தொடர்ந்து பனியின் தாக்கம் சிறிது சிறிதாக குறைந்திருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் அப்பகுதியில் மூழ்கியதாக கருதப்படும் அந்நகரத்தில் இருந்த பிரமிக்க வைக்கும் கிரானைட் பிரமிடுகள் மற்றும் படிமங்கள் போன்றவை அளவுக்கு அதிகமான ஆற்றல்கள் வெளிப்படும் என்றும் அதன் பின்னர் அவை ஆற்றல் வெடிப்புகளாக வெளிவந்து ஒரு வித சக்தியை வெளிபடுத்தும் என்று கூறப்படுகிறது.

அந்த சக்திகள் தான் அப்பகுதியே வழியே செல்லும் விமானங்கள் மட்டும் கப்பல்களை உள்ளே இழுப்பதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments