கல்பனா அக்கா செத்துட்டாங்க..எங்கள காப்பாத்துங்க! தமிழச்சியின் கதறல்

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்
2864Shares
2864Shares
lankasrimarket.com

சவுதி அரேபியாவில் பணிப்பெண்ணாக இருக்கும் பெண் ஒருவர் பேசும் ஓடியோ வைரலாக வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது.

அந்த ஆடியோவில் பேசிய பெண் கூறியிருப்பதாவது, நான் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் என்ற இடத்தில் ஹவுஸ்மெயிடாக உள்ளேன்(பணிப்பெண்).

சவுதியில் இலங்கை தமிழ் பெண்ணான கல்பனா அக்கா கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை தூதரகம் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. சவுதியில் 99 சதவீதம் பணிப்பெண்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு உயிரும் எப்படி போகிறது தெரியுமா?

வெளியில் இருக்கும் டிரைவர் அண்ணாக்களுக்கு கூட தெரியும். ஆனால் யாரும் உதவ முன் வருவது இல்லை.

இந்த ஆடியோவை வாட்ஸ்ஆப்பில் பார்வர்டு செய்யவும். நீங்கள் நினைத்தால் எங்களை கண்டிப்பாக காப்பாற்ற முடியும்.

நாங்க எல்லாருமே நாட்டுக்கு உயிரோட திரும்பிப் போகணும்.

எல்லாருமே ஒரே தமிழ் இனம் தானே, தமிழ் ரத்தம் தானே, எங்களுக்காக நீங்க எல்லாம் உதவ மாட்டீங்களா?

இங்கு இருக்கும் நீங்க தான் எங்களுக்கு உதவ முடியும். கல்பனா அக்காவோட சாவு தான் கடைசியான சாவாக இருக்கணும்.

நாங்கள் எல்லாம் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருக்கிறோம். எங்களை எப்பொழுது வீட்டுக்கு அனுப்புவார்கள் என்று கூட எங்களுக்கு தெரியாது.

நாங்க இருக்கும் வீட்டில் எங்களை பயமுறுத்தி வைத்துள்ளார்கள். கூடப் பிறந்த அண்ணனா நினைத்து உதவி செய்யுங்க. எங்கள் நாட்டிற்கு செல்ல உதவுங்க என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆடியோ ஒரு மாத காலமாக வாட்ஸ்ஆப்பில் பரவிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments