ஜப்பான் நோக்கி 4 ஏவுகணைகளை செலுத்திய வட கொரியா: அதிர்ச்சியில் உலக நாடுகள்

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்

ஜப்பான் நாட்டை குறி வைத்து வட கொரியா 4 ஏவுகணைகளை செலுத்தியுள்ள சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியா எல்லையில் ராணுவ தளவாடங்களை நிறுத்தியுள்ள அமெரிக்கா கடந்த புதன் கிழமை அன்று ராணுவ பயிற்சியை கூட்டாக மேற்கொண்டது.

இந்த பயிற்சியானது தனது நாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக வட கொரியா கண்டனம் தெரிவித்து வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று கண்டம் விட்டு கண்டம் பாயும் 4 ஏவுகணைகளை ஜப்பான் எல்லையை நோக்கி வட கொரியா செலுத்தியுள்ளது.

ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த 4 ஏவுகணைகளும் ஜப்பான் நாட்டிற்கு 300 கி.மீ தொலைவில் உள்ள கடற்பகுதியில் விழுந்துள்ளன.

இது குறித்து தென் கொரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரியா செலுத்திய 4 ஏவுகணைகளும் 250 கி.மீ உயரம் வரை பறந்து சுமார் 1,000 கி.மீ தூரம் வரை பயணத்து கடலில் விழுந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் இந்த நடவடிக்கையை ஜப்பான் பிரதமரான ஷின்சோ அபே கடுமையாக கண்டித்துள்ளார்.

மேலும், ஐ.நா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வட கொரியாவின் செயல்கள் அணு ஆயுத போரை தொடங்கும் சூழலை ஏற்படுத்தி வருவதாக’ கண்டனம் தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருவதாகவும், தக்க நேரத்தில் சரியான பதிலடிகளை கொடுப்போம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments