சீறிப்பாய்ந்து வந்த ராட்சத சுறா: அச்சத்தில் அலறிய பயணிகள்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

தென் ஆப்பிரிக்காவில் ராட்சத சுறா ஒன்று சுற்றுலாப்பயணிகள் செல்லும் டைவிங் கூண்டினை ஆக்ரோஷமாக தாக்க வந்த வீடியோ வெளியாகியுள்ளது.

கடல் வாழ் உயிரினங்களை ரசித்து பார்ப்பதற்காக சுற்றுலாப்பயணிகள் டைவிங் கூண்டில் செல்வது வழக்கம்.

இந்நிலையில், கடலில் டைவிங் கூண்டில் மிதந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சீறிவந்த ராட்சத சுறா ஒன்று, அந்த கூண்டினை ஆக்ஷேசமாக தனது வாயால் தள்ளியுள்ளது.

அதிலிருந்த, பயணி ஒருவர், Oh My God...... Oh My God என கத்தியுள்ளார். இரண்டு, மூன்று முறை தாக்கிய சுறா அதன் பின்னர் தண்ணீருக்குள் சென்றுவிட்டது.

இதுகுறித்து பயணி ஒருவர் கூறியதாவது, இதுபோன்று கூண்டிலில் பயணம் செய்யும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ஏனெனில் எந்த நேரத்தில் சுறா வந்து நம்மை தாக்கும் என்று சொல்ல முடியாது. எனவே நாம் செல்லும்போது, பாதுகாப்பு உபகரணங்களையும் எடுத்து செல்வது நல்லது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments