நடுக்கடலில் இலங்கை கப்பலை கடத்திய கொள்ளையர்கள்: மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்

சோமாலியா நாட்டு கடற்பகுதியில் இலங்கையை சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று கடத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை தேசியக் கொடியுடன் சரக்கு கப்பல் ஒன்று சோமாலியா நாட்டு கடற்பகுதியில் நேற்று பயணம் மேற்கொண்டுள்ளது.

அப்போது, திடீரென அங்கு வந்த கடற்கொள்ளையர்கள் கப்பலை சுற்றி வளைத்து தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த கடத்தல் பின்னணியில் சோமாலியா கடற்கொள்ளையர்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இது குறித்து ஐரோப்பிய ஒன்றிய கடற்படை அதிகாரி பேசியபோது, ‘நேற்று பாதுகாப்பாக வந்த கப்பல் ஒன்று திடீரென மாயமாக காணாமல் போயுள்ளது.

இந்த கடத்தல் சம்பவம் உண்மையானது எனில் கடந்த 2012-ம் ஆண்டிற்கு பிறகு சோமாலியா கடற்கொள்ளையர்கள் நடத்திய முதல் கடத்தல் சம்பவமாக இருக்கும் என அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், கப்பலை மீட்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், கடத்தல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments