பேரழிவை தரும் வெடிகுண்டுகளை தயாரிக்கும் வடகொரியா: அதிர்ச்சியில் உலக நாடுகள்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கிம் ஜாங் ஆளும் வட கொரியாவில் இந்த மாத இறுதிக்குள் பேரழிவை ஏற்படுத்தும் பயங்கர வெடிகுண்டுகள் தயாராகி விடும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வட கொரியாவை ஆளும் சர்வாதிகாரி கிம் ஜாங் கடந்த வருடம் மட்டும் நான்கு ஏவுகணைகளை உருவாக்கி அதை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் மீண்டும் அணுவாயுத சோதனையை அவர் எந்த நேரத்திலும் தொடங்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தை அமெரிக்காவும், தென் கொரியாவும் உற்று நோக்கி வருவது முக்கிய விடயமாகும்.

அணுவாயுதத்தை விட பல மடங்கு சக்தி வாய்ந்த ஒரு நகரையே அழிக்ககூடிய ஹைட்ரஜன் வெடிகுண்டு கிம் ஜாங் உத்தரவின் பேரில் தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும், இந்த மாத இறுதிக்குள் அது பயன்பாட்டுக்கு வரும் என நம்பப்படுகிறது. இந்த விடயம் உலக நாடுகளிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments