ஹெலிக்காப்டரை சுட்டு வீழ்த்திய தீவிரவாதிகள்! கமெராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஈராக் இராணுவத்திற்கு சொந்தமான ஹெலிக்காப்டரை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொசூல் நகரின் கிழக்கு பகுதியில் இராணுவத்திற்கு சொந்தமான ஹெலிக்காப்டர் நுழைந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஹெலிக்காப்டரில் இருந்த 2 பைலட்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈராக் இராணுவம் தரப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் தரையில் இருந்து சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது வான்வெளி தாக்குதலா என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மொசூலை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். அதனை மீட்பதற்காக கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து ஈராக் படைகளுக்கு உதவியாக அமெரிக்கா தலைமையிலான சர்வதேச கூட்டுப்படைஅதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments