குடிமக்களுக்கு 72,000 டொலர் பரிசு அறிவித்த சீனா அரசு: எதற்கு தெரியுமா?

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்

சீனா அரசாங்கத்தை உளவுப்பார்க்கும் வெளிநாட்டினர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 72,000 டொலர் வரை பரிசு வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

சீனாவின் தலைநகரான பெய்ஜிங் தான் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், பெய்ஜிங்கில் வசிக்கும் குடிமக்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

சீனா அரசாங்கத்தை உளவு பார்க்கும் வெளிநாட்டினர்கள் குறித்து தகவல் அளிக்கும் நபர்களுக்கு தகவலின் நம்பகத்தன்மை மற்றும் பயன்பாட்டின் அடிப்படையில் 72,000 டொலர் வரை பரிசு வழங்கப்படும்.

இந்த தகவல்களை பெய்ஜிங் நகராட்சி வெளியிட்டுள்ள இணையத்தளம் மூலமாகவும் அல்லது தபால் மூலமாகவும் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தலாம்.

சீனாவை உளவுப்பார்ப்பதை தடுக்க குடிமக்கள் மத்தியில் கடந்தாண்டு முதல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் அடுத்தக்கட்டமாக தங்களது நாட்டை வெளிநாட்டினர்கள் உளவு பார்ப்பதை தடுக்க பொதுமக்கள் மத்தியில் ஊக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் இந்த பரிசு தொகையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments