டொனால்டு டிரம்பை முந்தினார் நரேந்திர மோடி! எதில் தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் உலகளவில் டிரம்பை முந்தி அதிகம் பேர் பின்பற்றும் நபராக முதலிடத்துக்கு நரேந்திர மோடி வந்துள்ளார்.

அரசியல் தலைவர்கள் பலர் சமூகவலை தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்கள்.

சமீபத்தில் வந்த ஆய்வு முடிவின் படி பிரபல சமூகவலை தளமான இன்ஸ்டாகிராமில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பை பின்னுக்கு தள்ளி விட்டு இந்திய பிரதமர் மோடி 6.8 மில்லியன் பாலோவர்ஸுடன் முதலிடத்தில் உள்ளார்.

இரண்டாம் இடத்தில் உள்ள டிரம்புக்கு 6.3 மில்லியன் பாலோவர்ஸ் உள்ளனர். மூன்றாம் இடத்தில் போப் பிரான்சிஸ் 3.7 மில்லியன் பாலோவர்ஸுடன் உள்ளார்.

நான்காவது இடத்தில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை 3.4 மில்லியம் பாலோவர்ஸுடன் உள்ளது.

முதலிடத்தில் உள்ள நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் வெறும் 53 புகைப்படங்களை மட்டுமே பதிவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments