பறக்கும் விமானத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட 3 சடலங்கள்: பதற வைக்கும் சம்பவம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
1539Shares
1539Shares
lankasrimarket.com

மெக்சிகோவில் பறக்கும் விமானத்திலிருந்து மூன்று நபர்களின் சடலங்கள் தூக்கி வீசப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவின் Sinaloa மாகாணத்தில் நேற்று காலையில் ஒரு விமானம் வானத்தில் பறந்து கொண்டிருந்தது.

அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த விமானத்தில் இருந்து மூன்று நபர்கள் கீழே தள்ளப்பட்டனர்.

மூன்று பேருமே கொலை செய்யப்பட்டு கீழே தள்ளபட்டனர். அதில் ஒருவரின் சடலம் ஒரு மருத்துவமனை கட்டிடத்தின் மேலே விழுந்தது.

மீதி இருவரின் சடலங்கள் அங்கிருந்த ஒரு வீட்டின் வாசலில் விழுந்துள்ளது.

இது குறித்து கூறிய பொலிசார், இந்த மூவரும் மெக்ஸிக்கோவின் சினாலாவா போதை மருந்து கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இவர்கள் உடலில் காயங்கள் உள்ளது. அதனால் இவர்கள் இறப்பதற்கு முன்னர் மிகவும் கொடுமைபடுத்தபட்டுள்ளனர்.

இவர்கள் யார் என்ற அடையாளங்கள் தெரியவில்லை.

இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments