ஒசாமா பின்லேடனுக்கு நேர்ந்த கதிதான் வட கொரிய ஜனாதிபதிக்கும்? சிறப்பு படையை அனுப்பிய அமெரிக்கா

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஒசாமா பின் லேடனை தீர்த்துகட்டிய அமெரிக்காவின் Navy SEALS எனப்படும் சிறப்பு படையை வட கொரிய ஜனாதிபதிக்கு எதிராக டிரம்ப் அரசு களமிறக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி வட கொரிய ஜனாதிபதியை பதவியில் இருந்தும் அதிகாரத்தில் இருந்தும் வெளியேற்றும் நடவடிக்கையை Navy SEALS எனப்படும் சிறப்பு படை துரிதமாக செயல்படுத்த துவங்கியுள்ளது.

குறித்த நடவடிக்கையானது மிக ரகசியமாக வட கொரியா அருகாமையில் துவக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் வட கொரிய ஜனாதிபதி உயிருக்கு ஆபத்து நேரலாம் அல்லது கைதாகி பதவியில் இருந்து துரத்தப்படலாம் என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SEAL Team 6 எனப்படும் இந்த சிறப்பு படையானது தனது அதிரடி நடவடிக்கைகளால் கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம், பாகிஸ்தான் நாட்டில் தலைமறைவாக வாழ்ந்து வந்த அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அவரது இல்லத்தில் புகுந்து தாக்கி படுகொலை செய்தது.

அதுபோன்ற ஒரு அதிரடி நடவடிக்கையை வட கொரிய ஜனாதிபதி கிம் மீதும் SEAL Team 6 நடத்தலாம் என முக்கிய செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஏற்கெனவே அமெரிக்க போர் கப்பல்கள் வட கொரியாவை வட்டமிட்டு வரும் நிலையில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என பதட்டமான சூழல் நிலவி வருகிறது என அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு நாளேடு தெரிவித்துள்ளது.

இதனிடையே, அமெரிக்கா தங்களை போருக்கு தூண்டுவதாகவும், வட கொரியாவின் அமைதியை சீர்குலைக்க டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு முயன்று வருவதாகவும் வட கொரியா குற்றம்சாட்டியுள்ளது.

மட்டுமின்றி அமெரிக்கா விரும்புவது போல எந்த அளவுக்கு எதிர்வினையை வெளிப்படுத்த வேண்டுமோ அதே அளவுக்கு வட கொரியா தயாராக இருப்பதாகவும் அந்த நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments