ரஷ்ய பள்ளியில் நிகழ்ந்த தாக்குதலில் 330 பேர் பலி: அரசுக்கு ஏற்கனவே தெரியுமா?

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்
765Shares
765Shares
lankasrimarket.com

ரஷ்ய நாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த 2004-ம் ஆண்டு நிகழ்ந்த தாக்குதலில் 330 கொல்லப்பட்ட வழக்கில் ஐரோப்பிய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

ரஷ்யாவில் Chechen என்ற பிரிவினைவாத போராட்டக்காரர்கள் இயங்கி வருகின்றனர்.

அரசாங்கத்திற்கு பல்வேறு கோரிக்கைகள் அளித்தும் அரசு நிராகரித்து விட்டதால் மிக மோசமான தாக்குதலை நிகழ்த்த வேண்டும் என திட்டமிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து கடந்த 2004-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் Beslan நகர் பள்ளியில் சுமார் 30 பேர் ஆயுதத்துடன் நுழைந்து 1,100 பேரை சிறை வைத்தனர்.

அரசாங்கம் நிகழ்த்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. ஆனால் போராட்டக்காரர்கள் பள்ளியை விட்டு வெளியேறவில்லை.

சுமார் 52 மணி நேரத்திற்கு பிறகு அதிரடிப்படையினர் திடீரென பள்ளிக்குள் நுழைந்து போராட்டக்காரர்களை நோக்கி தாக்கியுள்ளனர்.

அதிரடிப்படையைக் கண்டு ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர்.

இதில் குழந்தைகள் உள்பட 334 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

உலகை உலுக்கிய இத்தாக்குதலுக்கு ரஷ்ய அதிபரான விளாடிமிர் புதினும் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.

இச்சம்பத்தில் பாதிக்கப்பட்ட பலர் ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கின் இறுதி விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்தபோது. ‘பள்ளியில் தாக்குதல் நடத்தப்போவது ரஷ்யா அரசுக்கு ஏற்கனவே தெரியும். ஆனால், இத்தாக்குதலை தடுக்க ரஷ்யா அரசு தவறியுள்ளது.

எனவே, இக்குற்றத்தை ஏற்றுக்கொண்டு 3 மில்லியன் யூரோ இழப்பீடு வழங்க வேண்டும் என ரஷ்யாவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்றுக்கொள்ளும்படி இல்லை எனவும், இத்தீர்பை ரஷ்ய அரசு நிராகரிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments