சுற்றுலாவுக்கான சிறந்த நாடுகள் பட்டியல்.....இது தான் பிரான்ஸ், சுவிஸின் நிலை!

Report Print Basu in ஏனைய நாடுகள்
783Shares
783Shares
lankasrimarket.com

சுற்றுலாப்பயணிகள் அதிகம் செல்லும் நாடுகளின் பட்டியலை உலக பொருளாதார அமைப்பு ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ளது. 136 நாடுகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

2016ம் ஆண்டுக்கான உலகளவில் அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தாண்டு ஐரோப்பிய நாடான ஸ்பெயின் முதலிடத்தை பிடித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த பிரான்ஸ் இந்தாண்டு இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுற்கு அந்நாட்டில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலே காரணம் என கூறப்படுகிறது.

ஸ்பெயினில் சுற்றுலாப் பயணிகளுக்கான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் நிறைவாக உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனி மூன்றவாது இடத்திற்கும், கடந்தாண்டில் 9வது இடத்தில் இருந்த ஜப்பான் இம்முறை நான்காவது இடத்திற்கும் முன்னேறியுள்ளது. இந்தியா இந்த பட்டியலில் 40வது இடத்தில் உள்ளது.

டாப் 10 நாடுகளின் பட்டியல்: முதலிடத்தில் ஸ்பெயினை தொடர்ந்து பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இத்தாலி, கனடா, சுவிட்சர்லாந்து இடம்பிடித்துள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments