பதற்றம் நிறைந்த பகுதியில் சீனா ஏவுகணை சோதனை: என்ன ஆனது தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

இரண்டு கொரிய நாடுகளும் பரபரப்பாக இருக்கும் சமயத்தில் சீன அரசு நேற்று ஏவுகணைச் சோதனை ஒன்றை நடத்தியுள்ளது.

தென் கொரியாவில் குடியரசுத் தலைவராக இருந்த பார்க் கியூன்-ஹை மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து அவர் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து அங்கு குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

பரபரப்பான சூழலில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் மூன் ஜே-இன் மற்றும் ஹாங் ஜூன்-யோ களத்தில் உள்ளனர். அதைத் தொடர்ந்து வடகொரியா தனது அணு ஆயுத பலத்தால் பல்வேறு நாடுகளை மிரட்டி வருகிறது.

இதன் காரணமாக கொரிய தீபகற்ப பகுதியே பரபரப்பாக இருக்கிறது.

இந்நிலையில் சீன தன் பங்கிற்கு பரபரப்பு மட்டுமின்றி பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நேற்று ஏவுகணைச் சோதனை ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இரண்டு கொரிய நாடுகளும் சீனாவும் பகிர்ந்துகொள்ளும் பாகாய் குடா கடல் பகுதியில் இன்று ஏவுகணைச் சோதனை ஒன்றை நடத்தி உள்ளது சீன அரசு. செயற்கைக்கோள் வழிகாட்டலில் இயங்கும் இந்த ஏவுகணை வெற்றியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments