ரஷ்யாவை சீண்டும் ஐ.எஸ் அமைப்பு: வெளியான பகீர் வீடியோ

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்

ரஷ்யாவை சேர்ந்த புலனாய்வு துறை அதிகாரி ஒருவரின் தலையை துண்டித்து கொலை செய்யும் வீடியோவை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒழிக்கும் நோக்கில் அந்நாட்டில் ரஷ்யாவை சேர்ந்த ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம் இரு தரப்பினருக்கும் மத்தியில் நிகழ்ந்த தாக்குதலுக்கு பின்னர் ரஷ்யாவை சேர்ந்த புலனாய்வு அதிகாரி ஒருவரை ஐ.எஸ் அமைப்பு சிறைப்பிடித்துள்ளது.

இந்நிலையில், ஜேர்மனியின் நாசிச படைகளை தோற்கடித்த நாளான இன்று ரஷ்யாவில் ராணுவ அணிவகுப்பு பெற்று வருகிறது.

இதே தினத்தில் ஐ.எஸ் அமைப்பு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 12 நிமிடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள அந்த வீடியோவில் ரஷ்ய மொழியில் தீவிரவாதி ஒருவன் பேசுகிறான்.

தங்களது அமைப்பிற்கு எதிரான தாக்குதலை நிறுத்த வேண்டும் என ரஷ்யாவிற்கு அதில் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

பின்னர், கடந்தாண்டு சிறைப்பிடிக்கப்பட்ட புலனாய்வு துறை அதிகாரியின் தலையை ஒரு தீவிரவாதி துண்டித்து கொலை செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள அதிகாரி Colonel Evgeny Petrenko எனக் கூறப்பட்டாலும் இத்தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

எனினும், ரஷ்யாவை சேர்ந்த புலனாய்வு துறை அதிகாரியை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு கொலை செய்துவிட்டதாக கூறுவது உண்மை இல்லை எனவும், சிரியாவில் உள்ள ராணுவ வீரர்கள் மிகவும் பாதுகாப்புடன் இருப்பதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments