பிலிப்பைன்ஸில் பருவ வயது சிறுவர்கள் அனுபவிக்கும் வேதனை

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

ஒரு சிறுவன் பருவ வயதை அடையும்போது விருத்தசேதன சடங்கு செய்யப்படுகிறது.

வழக்கமாக, அவன் பாரம்பரியங்களைக் கற்பிக்கிற ஒரு பள்ளிக்கு அனுப்பப்படுகிறான், அங்கே அவனுக்கு விருத்தசேதனம் செய்யப்படுகிறது.

குணமாகும்வரை ஒருசில வாரங்களுக்கு மற்றவர்களிடமிருந்து பிரித்து தனியாக வைக்கப்படுகிறான். இந்தச் சமயத்தில் குறிப்பிட்ட சடங்குகளை அவன் பின்பற்ற வேண்டும், ஓர் ஆணாக இருப்பதற்குக் கற்றுக்கொடுக்கப்படுகிறான்.

விருத்தசேதன சடங்கு, பிலிப்பைன்ஸ் நாட்டில் பாரம்பரியமாக பின்பற்றப்படுகிறது

பிலிப்பைன்ஸ் நாட்டில் இளம் வயது சிறுவர்களுக்கு விருத்தசேதனம் செய்து வைப்பது பாரம்பரியமாக நடைபெற்று வரும் ஒரு நிகழ்வு.

விருத்தசேதனம் இஸ்லாமியர்களும் யூதர்களுமே பாரம்பரியமாக செய்து கொள்வது வழக்கம். ஆனால் பிலிப்பைன்ஸ் மக்களால் Tuli என கொண்டாடப்படும் இந்த சிறப்பு விருத்தசேதன சடங்கானது இங்கு பொதுவாக காணப்படுகிறது.

காரணம் இங்கு ரோமன் கத்தோலிக்கர்கள் பெரும்பான்மை சமூகமாக உள்ளனர்.

இந்நிலையில் தலைநகர் மணிலா அருகே அமைந்துள்ள மரிகினா நகரில் பாடசாலை ஒன்றில் இளம் வயது சிறுவர்கள் 300 பேருக்கு கூட்டாக விருத்தசேதனம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்வின் போது பாடசாலை வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, வகுப்புகளே மருத்துவ கூடங்களாக மாற்றப்படும்.

பிலிப்பைன்ஸ் நாடு இஸ்லாமியர்கள் வசம் இருந்த காலம் முதற்கொண்டே இந்த விருத்தசேதன நிகழ்வினை பாரம்பரியமாக நிகழ்த்தி வருகின்றனர். தற்போது பெரும்பாண்மை சமூகமாக கிறிஸ்தவர்கள் இருந்த போதும் விருத்தசேதனம் பொதுவானதாக கருதப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பானது வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் , உலகில் 15 வயதுக்கு உட்பட்ட 30-33 விழுக்காடு சிறுவர்களுக்கே விருத்தசேதனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. ஆனால் பிலிப்பைன்ஸ் நாட்டில் மட்டும் இந்த எண்ணிக்கை 93 விழுக்காடு என கணக்காக்கப்பட்டுள்ளது.

இதனால் சிறுவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் இதே மரிகினா நகரில் 1500 சிறுவர்களுக்கு கூட்ட விருத்தசேதனம் மேற்கொள்ளப்பட்டது. சுகாதாரத்தை மேற்கோள்காட்டிய உலக கின்னஸ் சாதனை அமைப்பு இந்த நிகழ்வினை நிராகரித்து விருது வழங்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments