மீண்டும் புதிய ஏவுகணை சோதனை மேற்கொண்டது வட கொரியா

Report Print Basu in ஏனைய நாடுகள்

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை மேற்கொண்டுள்ளதாக தென் கொரியா இராணுவம் தெரிவித்துள்ளது.

தென் கொரியா தலைமை இராணுவ அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரியா தலைநகர் பியோங்கியாங்க்கு வடக்கே உள்ள Pukchang பகுதியிலிருந்து இந்த ஏவுகனை சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தவிர இந்த ஏவுகணை சோதனை குறித்த மேலதிக தகவல்களை தென் கொரியா வெளியிடவில்லை.

கடந்த வாரம் ரஷ்யாவிற்கு அருகே 60 கி.மீ தொலைவில் வட கொரியா ஏவுகணை சோதனை மேற்கொண்டது நினைவுக் கூரத்தக்கது.

கடந்த திங்களன்று, ஐ.நா. பாதுகாப்புக் குழு மீண்டும் பியோங்யாங் அத்தகைய சோதனைகளை நடத்தக்கூடாது என கோரியது.

தற்போது, மீண்டும் வட கொரியா ஏவுகளை சோதனை மேற்கொண்டுள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments