கல்நெஞ்சம் கொண்ட தாய்: குழந்தைகளை அனாதையாக சாலையில் விட்டுச் சென்ற கொடூரம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

இரண்டு பிள்ளைகளை இருட்டு வேளையில் சாலையில் அனாதையாக விட்டுச் சென்ற தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வியட்நாமின் தலைநகரான Hanoiவில் சாலை ஓரத்தில் பிளாஸ்டிக் கூடையில் கை குழந்தை ஒன்றும், அதன் அருகில் ஆறு வயதான சிறுவனும் அழுதபடி நேற்று அதிகாலை முதல் உட்கார்ந்திருந்தார்கள்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் அளிக்க சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அழுது கொண்டிருந்த சிறுவனிடம் விசாரணை நடத்தியுள்ளார்கள்.

விசாரணையில், பிளாஸ்டிக் கூடையில் இருந்த குழந்தை சிறுவனின் தம்பி என்பது தெரியவந்தது.

மேலும், இவர்களின் தாய் இருவரையும் அதிகாலை இருட்டாக இருக்கும் சமயத்தில் இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து சாலையோரத்தில் விட்டு சென்றதும் தெரியவந்தது.

வாகனத்துக்கு பெட்ரோல் போட்டு விட்டு வருவதாக கூறி சென்ற தாய் அதன்பின்னர் வரவேயில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் Nhu Goc என்பவர் கூறுகையில், சாலையில் இருந்த கைக்குழந்தை தற்போது மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

குழந்தையின் பெற்றோர் பற்றி தகவல் தெரிந்தால் மருத்துவமனையை அணுகலாம் என கூறியுள்ளார்.

இதனிடையில் குழந்தைகளின் பெற்றோரை தேடும் முயற்சியில் பொலிசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments