16 வயதில் படிப்பை நிறுத்திய சிறுமி இன்று உலகின் முதல் பெண் கோடீஸ்வரி

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்

சீனாவை சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவர் தனது 16 வயதில் படிப்பை நிறுத்திவிட்டு கடின உழைப்பில் ஈடுப்பட்டதால் இன்று உலக பெண் கோடீஸ்வரிகளின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

சீனாவில் பிறந்த Zhou Qunfei(47) என்ற பெண் தொழிலதிபர் தான் இந்த மகத்தான சாதனையை படைத்துள்ளார்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் கடும் சிரமத்திற்கு மத்தியில் பாடசாலைக்கு சென்றுள்ளார். ஆனால், வறுமையின் காரணமாக 16 வயதில் படிப்பை நிறுத்திவிட்டு கடிகாரங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.

பணி செய்வதை விட அத்துறையில் உள்ள தொழில் சார்ந்த நுட்பங்களை திறமையாக கற்றுக்கொண்டார்.

குறிப்பாக, கடிகாரங்களில் உள்ள லென்சுகளை தயாரிப்பது எப்படி என்ற நுணுக்கத்தை கற்றுக்கொண்டு தனது 23-வது வயதில் கடந்த 1993-ம் ஆண்டு கடிகார லென்சுகளை தயாரிக்கும் ‘Lens Technology' என்ற சொந்த நிறுவனத்தை தொடங்கினார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு 2003-ம் ஆண்டு பிரபல செல்போன் நிறுவனமான மோட்டோரோலா இவரது நிறுவனத்தை தொடர்புக்கொண்டு தனது Razr V3 மொடல் செல்போனுக்கு scratch-proof glass lens தயாரித்து கொடுக்குமாறு ஆர்டர் வழங்கியுள்ளது.

மோட்டோரோலாவை தொடர்ந்து ஹெச்.டி.சி, நோக்கியா மற்றும் சாம்சுங் ஆகிய நிறுவனங்களும் இவருக்கு ஆர்டர்களை அள்ளி வழங்கியது.

இதனை தொடர்ந்து, 2007-ம் ஆண்டு அப்பிள் நிறுவனம் தனது முதல் செல்போனை அறிமுகம் செய்தது. இந்த மொடலுக்கும் ஸ்கிரீன் கிளாஸ் தயாரித்து வழங்கினார்.

இன்றளவும் அப்பிள் செல்போனுக்கு ஸ்கிரீன் கிளாஸ்சுகளை லென்ஸ் டெக்னாலஜி நிறுவனம் தான் தயாரித்து வழங்குகிறது.

2013-ம் ஆண்டு 3 தொழிற்சாலைகளை தொடங்கிய இவர் 2017-ம் ஆண்டில் 32 தொழிற்சாலைகளை தொடங்கி தற்போது சுமார் 1 லட்சம் ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறார்.

கல்வியறவு இல்லாவிட்டாலும் தனது சொந்த உழைப்பால் உயர்ந்த இப்பெண் தொழிலதிபரின் சொத்து மதிப்பு 9.2 பில்லியன் டொலர் ஆகும். இவரது நிறுவனத்தின் சொத்து மதிப்பு 11 பில்லியன் டொலர்.

இதன் மூலம், உலகில் உள்ள பெண் கோடீஸ்வரிகளின் பட்டியலில் குறுகிய காலத்தில் Zhou Qunfei முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments