உலகில் குண்டான பெண்கள் உள்ள நாடுகள் எவை தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

உலகில் உடல்பருமனாக உள்ள பெண்கள் அதிகமாக வாழும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடமும், பிரித்தானியா இரண்டாவது இடமும் பிடித்துள்ளது.

குண்டான பெண்கள் அதிகமாக உள்ள நாடுகள் குறித்த ஆய்வு ஒன்றை தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இதில் பட்டியலில் முதல் இரண்டு இடம்பிடித்துள்ள இரு நாடுகளின் பெரும்பாலான பெண்களும் அதிக உடல்பருமனில் இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

பிரித்தானியாவில் 10 பெண்களில் 8 பேர் அதிக உடல்பருமனாக இருப்பதை குறித்த ஆய்வானது சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் இருதய நோய், நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய் தாக்கும் அபாயம் குறித்த இரு நாடுகளிலும் அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

பிரித்தானியாவில் அதிக உடல்பருமனால் ஆண்களில் 86.6 சதவிகிதம் பேர் அவதிப்படும் நிலையில் பெண்களில் இந்த எண்ணிக்கை 77.2 சதவிகிதமாக உள்ளது.

இளைஞர்களில் இந்த எண்ணிக்கையானது பெண்களில் 51.4 சதவிகிதமும் ஆண்களில் 48.7 சதவிகிதம் எனவும் தெரியவந்துள்ளது.

பிரித்தானியர்களை போலவே அயர்லாந்து நாட்டவர்களும் உடல்பருமனால் அவதிக்கு உள்ளாகி வருவதாக ஆய்வறிக்கை கூறுகின்றது. இதில் பெண்கள் 70.9 சதவிகிதமும், ஆண்கள் 86.4 சதவிகிதம் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers