ஏடிஎம்-மை உடைத்து கொள்ளையடித்த டிரம்ப்: முகமூடி சகோதரர்களின் அட்டகாசம்

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முகமூடியை அணிந்து கொண்டு இத்தாலியை சேர்ந்த இருவர் கொள்ளையடித்த சம்பவம் நடந்துள்ளது.

இத்தாலியின் டூரின் நகரிலேயே இக்கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

சுமார் 27 மற்றும் 31 வயது மதிக்கத்தக்க இருவர் 20 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 1 லட்சம் யூரோவை கொள்ளையடித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் முகமூடியை அணிந்து கொண்டு கொள்ளையடித்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்த பொலிசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்களே குற்றவாளிகள் என்பது தெரியவந்தது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers