சீண்டிப்பார்த்த இளைஞர்: வேட்டையாடிய கரடி

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
565Shares

தாய்லாந்து நாட்டில் தன்னை சீண்டிய நபரை கரடி ஒன்று கொடூரமாக வேட்டையாடியுள்ளது.

Phetchabun மாகாணத்தில் உள்ள கோயில் ஒன்றில் வளர்க்கப்பட்டு வரும் கரடிக்கு அங்கு வரும் பக்தர்கள் உணவு கொடுப்பது வழக்கம்.

ஒரு கட்டிடத்தினுள் கூண்டு ஒன்று அமைக்கப்பட்டு அதற்குள் கரடி அடைத்துவைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு தனது நண்பர்களுடன் வந்த சுற்றுலாப்பயணி ஒருவர் கயிற்றின் மூலம் உணவை கரடிக்கு கொடுக்க முயன்றுள்ளார்.

உணவை கொடுக்காமல் கரடியை கொஞ்சம் சீண்டி பார்த்துள்ளார், இதனால் கோபம் கொண்ட கரடி மதிலின் வழியாக அந்த இளைஞரை உள்ளே இழுத்து போட்டு வேட்டையாடியுள்ளது.

இதனால் அந்த இளைஞரின் உடலில் இருந்து ரத்தம் வெளியேறி சுயநினைவை இழந்துள்ளார், மதிலின் வெளியே நின்றவர்கள் கம்பை கொண்டு அந்த கரடியை அடித்தும், அந்த கரடியானது அந்த இளைஞரை தரதரவென்று இழுத்துக்கொண்டு கூண்டுக்குள் சென்றுள்ளது.

கரடி கூண்டுக்குள் சென்ற பின்னர், கோயில் அதிகாரிகள் கரடியை ஒரு கம்பால் அடித்து விரட்டி விட்டு அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

வீடியோவை காண

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்