உடல் ஊனமுற்றவராக நடித்து 25 கிலோ தங்கம் கடத்திய நபர் கைது

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்
234Shares
234Shares
ibctamil.com

பங்களாதேஷ் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு 25 கிலோ தங்கம் கடத்த முயன்ற நபரை பங்களாதேஷ் சுங்கத்துறை அதிகாரிகள் அதிகரியாக கைது செய்துள்ளனர்.

பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த Jamil Akhter என்பவரை தான் பொலிசார் கைது செய்துள்ளனர்.

உடல் ஊனமுற்றவர் என கூறிய அவர் எப்போதும் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு பயணம் மேற்கொண்டு வந்துள்ளார்.

ஆனால், கடந்த 8 மாதங்களில் மட்டும் பங்களாதேஷ் நாட்டில் இருந்து 13 முறை பயணம் மேற்கொண்டது பங்களாதேஷ் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று காலை பங்களாதேஷ் முதன்மை விமான நிலையத்திற்கு நபர் சக்கர நாற்காலியுடன் வந்தபோது அவரை தடுத்து பரிசோதனை பகுதிக்கு அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர்.

நாற்காலியில் இருந்து அவரை நீக்கிவிட்டு பார்த்தபோது அவர் உடல் ஊனமுற்றவர் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அவரது இரண்டு தொடை பகுதிகளில் 25 கிலோ எடையுள்ள தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு 1.5 மில்லியன் டொலர் ஆகும்.

நபரை கைது செய்த பொலிசார் இந்த கடத்தலில் ஈடுப்பட்டுள்ள முக்கியப்புள்ளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 3 ஆண்டுகளில் பங்களாதேஷ் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு கடத்தப்பட்ட சுமார் 1.5 டன் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சர்வதேச அளவில் தங்கத்தை அதிகளவில் பயன்படுத்தும் நாடுகளில் முன்னணியில் இந்தியா இருப்பதால் தங்கத்தை இறக்குமதி செய்ய அதிக கட்டணங்கள் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இக்கட்டணங்களை தவிர்க்கவே இதுபோன்று தங்கம் கடத்தல் சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்