காதலனை கத்தியால் குத்திக்கொன்ற நைஜீரிய பெண்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
341Shares
341Shares
ibctamil.com

நைஜீரியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது காதலனை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

நைஜீரியாவைச் சேர்ந்த இஸ்சு என்பவர் டெல்லியில் தனது காதலியுடன் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். அவர் காதலி அப்பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வந்தார்.

இந்நிலையில், நேற்று காதலர்கள் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்த பெண் தனது காதலனை கத்தியைக் கொண்டு தாக்கினார். இதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ரத்தம் அதிகளவில் வெளியான நிலையில் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்தனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்