தமிழரை காதலித்து திருமணம் செய்த இந்தோனேஷிய பெண் தற்கொலை: நீடிக்கும் மர்மம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
839Shares
839Shares
lankasrimarket.com

தமிழகத்தை சேர்ந்த நபரை காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்தோனேஷிய பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுபாஸ் என்ற பொறியியலாளர் கடந்த 2013 ஆம் ஆண்டு தனது வேலை காரணமாக இந்தோனேஷியாவுக்கு சென்றுள்ளார்.

அங்கு வேலை பார்த்த இடத்தில் அந்நாட்டை சேர்ந்த பெர்தாமியா வர்தாநியா (21) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அந்நாட்டிலேயே தனது மனைவியுடன் வசித்து வந்த சுபாஷ், நாளடைவில் அவரது நடவடிக்கை பிடிக்காத காரணத்தால் அந்நாட்டை விட்டு வெளியேறி கன்னியாகுமரிக்கு வந்துள்ளார்.

தனது கணவனை தொலைபேசி வாயிலாக பலமுறை தொடர்புகொண்ட பெர்தாமியா, தனக்கு சரியான பதில் கிடைக்காத காரணத்தால் அங்கிருந்து புறப்பட்டு கன்னியாகுமரியில் உள்ள சுபாஷின் வீட்டுக்கு வந்துள்ளார்.

அங்கு தனது கணவருடன் வசித்த போதும் இருவருக்கும் இருந்த பிரச்சனையால் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. பெர்திமியாவின் பெற்றோர் சமாதானப்பேச்சு வார்த்தையில் ஈடுபட்டபோதும் சுபாஷ் இணங்கவில்லை.

இந்நிலையில் தான் பெர்திமியா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது இறப்பு குறித்த தகவல் இந்தோனேஷியாவில் உள்ள அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுபாசும், பெர்தாமியாவும் திருமணத்துக்கு பிறகு இந்தோனேஷியா சென்று குடியேறினர். பெர்தாமியா, வேறு ஒரு வாலிபருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதாகவும், அந்த புகைப்படங்களை சுபாஷ் பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன் பிறகு தான் தன் மனைவி மீது சுபாசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மனைவியுடன் தகராறு செய்துகொண்டு சுபாஷ் கன்னியாகுமரியில் உள்ள அவரது வீட்டுக்கு வந்துள்ளார் என பொலிசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது, பெர்தாமியா உடலை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர், மேலும் இவரது இறப்பில் மர்மம் நீடிப்பதால் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்