பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிக்கும் நாடுகளின் பட்டியல் வெளியானது

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
888Shares
888Shares
lankasrimarket.com

பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிக்கும் நாடுகளின் பட்டியலில் ஈரான் முதல் இடத்தில் உள்ளது.

சமீபத்தில் சுவீஸ் குழு ஒன்று வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் உயர் பயங்கரவாதத்திற்கு நிதி அளித்தல் மற்றும் பணமோசடி அபாயங்கள், அதிகம் உள்ள 50 நாடுகள் பட்டியலில் 8.6 புள்ளிகளுடன் ஈரான் முதலிடத்தில் உள்ளது.

சுவிச்சர்லாந்தை சேர்ந்த Anti-Money Laundering மையம் ஒன்று ஆய்வு ஒன்றை நடத்தியது. நிதி மோசடி மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி அளிப்பது தொடர்பாக 146 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது.

இதில் 146 நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான்( 6.64 புள்ளிகள்) 46 வது இடத்தைப் பெற்றுள்ளது.

இந்த அபாயங்கள் அதிகம் உள்ள நாடுகளில் முதல் 10 நாடுகள் ஈரான், ஆப்கானிஸ்தான், கினியா-பிசாவு, தஜிகிஸ்தான், லாவோஸ், மொசாம்பிக், மாலி, உகாண்டா, கம்போடியா மற்றும் தான்சானியா ஆகியவையாகும். ஆபத்து அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் முதல் இடம் பெற்றிருக்கும் ஈரான் நாடு 8. 60 புள்ளிகளை பெற்று உள்ளது.

மிகவும் ஆபத்து குறைவாக உள்ள நாடுகள் பின்லாந்து (3.40 புள்ளிகள்), லித்துவேனியா மற்றும் எஸ்டோனியா நாடுகளாகும்.

இந்தியா 5.58 புள்ளிகளை பெற்று 88-வது இடத்தில் உள்ளது. 2016 ல் இருந்து குறித்த பயங்கரவாத நடவடிக்கைகளில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளாக சூடான், தைவான், இஸ்ரேல் மற்றும் வங்காள தேச நாடுகளால் உருவக்கபட்டு உள்ளது.

2017 ஆம் ஆண்டுகளில் பயங்கரவாதத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் ஜமைக்கா, துனிசியா, ஹங்கேரி, உஸ்பெகிஸ்தான் மற்றும் பெரு நாடுகளாகும்.

தெற்கு ஆசியாவில் உள்ள ஆப்கானிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கை முறையே 8.38, 7.57 ,7.15 புள்ளிகள் பெற்று 2-வது, 14, மற்றும் 25-வது இடங்களை பெற்று உள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்