நேரலையில் பெண் தொகுப்பாளரின் ஆடையை வெட்டிய ஆண் தொகுப்பாளர்: வைரலாகும் வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஸ்பெயினில் ஆண் தொகுப்பாளர் ஒருவர் நேரலையின் போது, பெண் தொகுப்பாளரின் ஆடையை கத்திரிக்கோலை வைத்து வெட்டியது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஸ்பெயினில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ளவர்கள் Juan y Medio மற்றும் Eva Ruiz. இவர்கள் அத்தொலைக்காட்சியில் Afternoon Here And Now என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியின் நேரலையின் போது இடைவெளியில் ஆண் தொகுப்பாளரான Juan y Medio தன்னுடைய சக தொகுப்பாளரான Eva Ruiz-இன் ஆடையை தான் வைத்திருந்த கத்திரிக்கோலால் தொடர்ந்து வெட்டினார்.

இதைக் கண்ட Eva Ruiz ஆத்திரப்படாமல் சிரித்தபடியே அவரை தள்ளிவிட்டு சென்றார். அதன் பின் அங்கிருந்த மற்றொரு பெண் ஒருவர் அவரை அழைத்துச் சென்றார். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இது குறித்து தெரிவிக்கையில், Juan y Medio சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த போது, Eva Ruiz அவரது ஆடையை வெட்டியதாலே, Juan y Medio தற்போது Eva Ruiz-ன் ஆடையை வெட்டியதாக கூறப்படுகிறது.

தொலைக்காட்சி நிறுவனம் தெரிவிக்கையில், இது ஒரு நகைச்சுவைக்காக செய்யப்பட்டது என்றும், நிகழ்ச்சி ஒளிபரப்புவதற்கு முன்னரே இது குறித்து தெரிவிக்கப்பட்டதாக கூறியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers