சிங்கப்பூரின் முதல் பெண் அதிபரான இந்திய பெண்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

சிங்கப்பூரில் முதல் பெண் அதிபராப இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹலீமா யாகோப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர், சிங்கப்பூரின் 8வது அதிபராவார். சிங்கப்பூர் அதிபரின் பதவிக்காலம் 6 வருடங்கள் ஆகும். தற்போது பதவி வகித்து வந்த டோனி டான் கெங் யாமின் பதவிக்காலம் கடந்த 31 ஆம் திகதியோடு முடிவடைந்தது.

இதையடுத்து நடைபெற்ற தேர்தலில், மலாய் இனத்தைச் சேர்ந்தவர்களே போட்டியிடலாம் எனக் கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் 23-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று (13-ம் தேதி) வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகரும், ஆளும் மக்கள் செயல்பாட்டுக் கட்சி உறுப்பினருமான ஹலீமா யாகோப் உட்பட ஐந்து பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

அதில், மற்ற நான்கு பேரின் வேட்புமனுக்களும் முழுத் தகுதி பெறாததால், மலாய் இனத்தைச் சேர்ந்த ஹலீமா யாகோப் போட்டியின்றி புதிய அதிபராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இதை, அந்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹலீமா யாகோபிற்கு, 63 வயதாகிறது. இன்று மாலை 6 மணிக்கு இஸ்தானாவில் நடைபெறும் நிகழ்ச்சியில், நாட்டின் 8-வது அதிபராக ஹலீமாவுக்குப் பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்படுகிறது.

இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்