உலகிலேயே நீளமான கால்களை கொண்ட மொடல் அழகி

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

உலகிலேய நீளமான கால்களை கொண்ட பெண்ணான எக்டேரினா லிஷினா கின்னஸ் விருதை பெற்று சாதனை படைத்துள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த மொடல் அழகியான எக்டேரினா லிஷினாவின் வயது 29. இவரது வலது கால் 132.3 செமீ, இடது கால் 132.2 செமீ நீளம் உடையது.

இதனால், உலகிலேயே நீளமான கால்களை கிண்ட இளம்பெண் என்ற கின்னஸ் விருது வழங்கப்பட்டது.

கின்னஸ் சாதனைக்காக இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் எக்டேரினா லிஷினாவின் கால்களை அளவெடுத்தனர். பின்னர் அவர்கள் சமர்பித்த தகவல்களின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டது.

இதுகுறித்து லிஷினா கூறியதாவது, நீளமான கால்கள் இருப்பதால்தான் 2008ம் ஆண்டு சீனாவில் நடந்த ஒலிம்பிக்கில் கூடைப் பந்து போட்டியில் கலந்துகொண்டு வெண்கல பதக்கம் வெல்ல முடிந்தது.

ஆனால், பள்ளிக்காலங்களில் எனது கால்களை பார்த்து பலபேர் கிண்டல் செய்துள்ளனர், ஆடைகள் மற்றும் காலணிகள் வாங்கும் விடயத்தில் மிகவும் சிரமத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers