ரெஸ்டாரண்டில் பயங்கரம்..கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளிய நபர்: துடிதுடித்து இறந்த பரிதாபம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

வெனிசுலாவில் உள்ள உணவகத்தில் பொதுமக்கள் பலர் இருந்து போது, மர்மநபர் ஒருவர் அங்கிருந்த நபரை கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளிவிட்டு தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெனிசுலா நாட்டின் Maracaibo பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் பொதுமக்கள் பலர் இருந்த வேளையில் திடீரென்று உள்ளே வந்த நபர், அங்கிருந்த சிறுமியை கையை வைத்து வெளியில் இழுத்து விட்டு, அதன் பின் அங்கு மேஜையில் இருந்த நபரை, தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டான், இதனால் அந்த நபர் அந்த இடத்திலே துடி துடித்து இறந்தார்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர் உடனடியாக அங்கிருந்து தப்பியுள்ளான். இது தொடர்பான வீடியோ காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதால் அது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

சம்பவத்தை அறிந்து உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார், அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டதில் இறந்த நபர் 34 வயது மதிக்கத்தக்க Climaco Segundo Uriana எனவும் கடந்த 10-ஆம் திகதி இச்சம்பவம் நடந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்