தடையை தகர்ப்போம்: வடகொரியா தலைவர் கிம் ஜாங் முக்கிய பேட்டி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

அமெரிக்காவுக்கு இணையான மிகப்பெரிய சக்தியாக விளங்குவதே வடகொரியாவின் இறுதி நோக்கம் என அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் கூறியுள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் கண்டனங்களையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை பரிசோதனைகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில் வடகொரியா தலைவர் அளித்துள்ள பேட்டி விவரங்களை அந்நாட்டின் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கிம் ஜாங் கூறுகையில், எவ்வளவு தடைகள் இருந்தாலும் அதை மீறி வடகொரியா அணு ஆயுத நாடாக மாறும்.

வெள்ளியன்று ஜப்பானை கடந்து செல்லும்படி செலுத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றியடைந்தது மட்டுமின்றி வட கொரியாவின் அணு ஆயுத சக்தியினையும் அதிகரித்துள்ளது.

நாட்டின் இறுதி நோக்கம் அமெரிக்காவிற்கு இணையாகவுள்ள உண்மையான சக்தியாக விளங்குவதேயாகும் என கூறியுள்ளார்.

ஐநா பாதுகாப்பு சபை கடுமையான பொருளாதார தடையை வடகொரியா மீது விதித்துள்ள போதும் அதை அந்நாடு பொருட்படுத்தாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்