ரஷ்ய வணிக வளாகம், ஹொட்டேல்களில் வெடிகுண்டு மிரட்டல்: மக்கள் வெளியேற்றம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
70Shares
70Shares
Seylon Bank Promotion

ரஷ்யாவில் வணிக வளாகங்கள் மற்றும் ஹொட்டேல்களில் வெடிகுண்டு அச்சுறுத்தல் எழுந்ததை அடுத்து பொதுமக்களை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.

ரஷ்ய வணிக வளாகம் மற்றும் ஹொட்டேல்களில் வெடிகுண்டு இருப்பதாக தொடர்ந்து 130 தொலைப்பேசி அழைப்புகள் குவிந்ததால் பரபரப்பு எழிந்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள் சந்தேகப் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்றியுள்ளனர்.

இதன் ஒருபகுதியாக நாட்டின் முக்கிய 3 பெரும் வணிக வளாகங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் அமைந்துள்ள Ohta Mall வளாகத்தில் இருந்து சுமார் 400 பொதுமக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளதாகவும்,

வெள்ளியன்று மாஸ்கோவில் உள்ள வணிக வளாகம் சிலவற்றில் இருந்து சுமார் 100,000 எண்ணிக்கையிலான பொதுமக்களை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றி சோதனை மேற்கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.

இதனிடையே தொடர் அச்சுறுத்தல் அழைப்பு வெளியாகும் தடங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில், வெளிநாடு வாழ் ரஷ்யர்கள் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை கண்டறிந்துள்ளதாக மத்திய பாதுகாப்பு துறை தலைமை அதிகாரி Alexander Bortnikov தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை தற்போது இருப்பதாகவும், இது ஒருவகை சதி பின்னணியாக கூட இருக்கலாம் எனவும் நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்