ஸ்வீடனில் பல்வேறு பகுதிகளில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: பலர் காயம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
184Shares
184Shares
lankasrimarket.com

ஸ்வீடனில் உள்ள முக்கிய நகரத்தில் பல்வேறு பகுதிகளில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்டதில் பலர் காயமடைந்துள்ளனர்.

ஸ்வீடனில் உள்ள Trelleborg நகரின் பல பகுதிகளில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பொலிசார் இதை முக்கிய சம்பவமாக கருதி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த தாக்குதல் நடவடிக்கையில் பலர் காயமுற்று மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த பகுதியானது வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும்.

முன்னதாக பரபரப்பு மிகுந்த சந்தைப் பகுதி ஒன்றில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து பொலிசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

குறித்த தாக்குதல்களில் 4 பேர் காயமுற்றதாகவும், அவர்களில் எவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் Trelleborg பகுதியில் மட்டும் 7 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும், இது முக்கிய தாக்குதல் சம்பவமாக கருதுவதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த பகுதிகளில் துப்பறியும் நாய்களும், தடயவியல் அதிகாரிகளும் விரைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குறித்த அடையாளங்கள் சேகரிக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் பொலிசார் முழுவீச்சில் களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

43,000 மக்கள் தொகை கொண்ட Trelleborg நகரமானது ஜேர்மனி மற்றும் போலந்து நாடுகளை கப்பல் பயணத்தால் இணைக்கும் ஸ்வீடனின் முக்கிய துறைமுகமாகும்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்